மாணவர் படுகொலை விவகாரம்: விசேட சந்திப்பு இன்று!
இன்று மாலை 3 மணிக்கு யாழில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை குறித்து ஆராய்வதற்கும் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாமல் தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதற்கென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக்கட்சிகளுக்கும் தமிழீழ விடுதலை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
யாழ்.பல்கலையின் இரு மாணவர்கள் நேற்று முன்தினம் சுட்டுக்கொல்லப்பட்டமையானது, தமிழினத்திற்கெதிரான வன்முறை, இன அழிப்பு போன்ற கொடூரங்கள் மறுபடியும் தலைகாட்ட தொடங்கிவிட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதென்றும், இக் கொடூர சம்பவமானது முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும் என்பதில் தமிழீழ விடுதலை இயக்கம் உறுதியோடு செயற்படும் என்றும் கட்சியின் செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
இதுபோன்றதொரு படுகொலை மீண்டும் அரங்கேறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே இன்று அனைத்துக் கட்சி சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Post a Comment