பொலிஸ் நடமாடும் சேவை ஆரம்பித்து வைப்பு!

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டுப்பித்தான் மடு கிராமத்தில், மன்னார் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் விசேட பொலிஸ் நடமாடும் சேவை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் இந்த சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாகவும், வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அவர்களின் வழி நடத்தலின் கீழ் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சிரந்த பீரிஸ் அவர்களின் தலைமையில், இன்று காலை புதுக்கமம் கிராம அலுவலகர் பிரிவுக்குட்பட்ட வட்டுப்பித்தான் மடு பொது மண்டபத்தில் குறித்த பொலிஸ் நடமாடும் சேவை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு குறித்த நடமாடும் சேவை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையிலான ஒரு மாத காலத்திற்கு குறித்த நடமாடும் சேவை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Comments