பிரதமர் நாடு திரும்பியதும் சம்பள பிரச்சினைக்கு தீர்வு!
வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் பழனி திகாம்பரம் இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாளை தலவாக்கலையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியால் போராட்டமொன்று நடத்தவுள்ளது.
அதில் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பாக வலியுறுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Comments
Post a Comment