நுவரெலியாவில் பெண் பொலிஸ் உடையில் இருந்த ஆண் கைது!
பெண் பொலிஸ் உடையில் இருந்த ஆண் ஒருவரை நுவரெலியா புலனாய்வு பிரிவினர் கைது செய்து நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்து வருவதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பெண் பொலிஸ் ஒருவர் நடமாடி வருவதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து பேருந்து நிலையத்திற்கு சென்ற நுவரெலியா புலனாய்வு பிரிவினர் குறித்த பெண் உடையில் இருந்த நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைக்கு உட்படுத்திய பொழுது அவர் ஒரு ஆண் என்பது தெரியவந்துள்ளது.
அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தனது பெயர் லோகநாதன் வினோத்குமார் எனவும் வயது 21 எனவும் தெரிவித்துள்ளதுடன் தனது சொந்த இடம் கேகாலை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபரிடம் தேசிய அடையாள அட்டையோ அல்லது வேறு எந்த ஒரு ஆவண மும் இல்லை.
நுவரெலியா பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் விசாரணையின் பின்பு நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் நுவரெலியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Comments
Post a Comment