திருகோணமலை பாடசாலைகளுக்கிடையிலா உதைப்பந்தாட்ட போட்டியில் தாருல் உலூம் சம்பியன்

அகில இலங்கை பாடசாலை உதைப்பந்தாட்ட சம்மேளனம் நடாத்திய திருகோணமலை பாடசாலைகளுக்கிடையிலான 13 வயது பிரிவுக்கான போட்டியில் தி/கிண்/தாருல் உலூம் மகா வித்தியாலயம் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது.

fareed








இப்போட்டி நேற்று 25 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலை 9.OO மணியாளவில் கிண்ணியா எழில்லரங்கு மைதானத்தில் திருகோணமலை பாடசாலை உதைபந்தாட்ட சம்மேளன இணைப்பாளர் ஏ.எல்.எம். நபில் தலமையில் நடைபெற்றது.

இதற்கு பிரதம விருந்தினர்களாக கிண்ணியா வலயக் கல்வி பணிமனை உடற்கல்வி ஆலோசகர் ஏ.கே.எம்.றிஸ்வி திருகோணமலை உதைபந்தாட்ட சம்மேளன செயலாளர் கே.ஜோகரட்னம் மற்றும் நிவாஸ் டிஜிடல் பிரின்ட் உரிமையாளர் நிவாஸ் கலந்து கொண்டனர்.

இப் போட்டியில் 16 பாடசாலை அணிகள் பங்குபற்றியது. தி /கிண்/தாருல் உலூம் மகா வித்தியாலயம் மற்றும் கிண்ணியா மத்திய கல்லூரி அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகி போட்டியிட்டது. இதில் தி/கிண்/ தாருல் உலூம் மகா வித்தியாலயம் ஒரு கோல் போட்டு (1-0) கிண்ணியா மத்திய கல்லூரி அணியை தோழ்வியடைய செய்து சம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டது.
அகில இலங்கை ரீதியான போட்டி எதிர்வரும் டிசம்பர் மாதம் 5, 6 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இதில் தி/கிண்/தாருல் உலூம் மகா வித்தியாலயம் பங்கு பற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)

Comments