ஈரான் செல்லும் ஜனாதிபதி மைத்திரி!

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அடுத்த சில வாரங்களில், தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஈரான் இஸ்லாமியக் குடியரசுடனான உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அடுத்த மாத இறுதியில் அல்லது டிசெம்பர் மாத தொடக்கம் ஜனாதிபதி ஈரானுக்கான பயணம் இடம்பெறும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் பயணத்தின் போது, ஈரானிய அதிபர் ஹசன் ரொஹானியுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருதரப்புப் பேச்சுக்களை நடத்துவார்.

அண்மையில் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நடந்த இரண்டாவது ஆசிய ஒத்துழைப்புக் கலந்துரையாடல் மாநாட்டின் பக்க நிகழ்வாக, ஈரானிய அதிபர் ஹசன் ரொஹானியை, ஜனாதிபதி மைத்திரியை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இதன்போது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளையும், ஒத்துழைப்புகளையும் மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு இரண்டு நாடுகளின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்திருந்தனர்.

Comments