‘விவசாய நிலத்திற்கு மின்சாரம்’: யாழில் அங்குரார்ப்பணம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
‘விவசாய நிலத்திற்கு மின்சாரம்’ எனும் புதிய திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நோக்கிலேயே ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
விவசாய நடவடிக்கைகளுக்கு சலுகை கட்டண அடிப்படையிலான புதிய முறைமையை அறிமுகம் செய்து வைக்கும் குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் நீர்வேலி, பொன். செல்வமஹால் அரங்கில் நடைபெறவுள்ளது.
இத்திட்டத்தின் ஊடாக இலங்கை விவசாய துறையில் பாரிய முன்னேற்றத்தை பதிவு செய்ய முடியும் என மின்வலு எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இதனூடாக விவசாயிகளுக்கு சலுகைக் கட்டண அடிப்படையில் விவசாய நடவடிக்கைகளுக்கு மின்சாரம் வழங்கப்படவுள்ளது.


Comments
Post a Comment