நுவரெலியாவினை கதிகலங்க வைத்த மனித மண்டையோடுகள்!

மண்டையோடுகளை கண்டு வியாபாரிகள் அச்சத்திற்கு உள்ளாகிய சம்பவம்  இன்று காலை 09 மணியளவில் நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா பிரதான நகரத்தில் உள்ள கடைகளுக்கு முன்பாக இந்த மனித மண்டையோடுகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

வழமையைபோல வியாபாரிகள் தங்களின் வியாபார நடவடிக்கைகளை நேற்று  இரவு 09 மணியளவில் முடித்துவிட்டு கடைகளை மூடிய பின்னர் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

இன்று காலை 09 மணியளவில் கடைகளை திறக்கும் போது கடைகளுக்கு முன்பாக மனித மண்டையோடுகள் கிடந்ததை கண்ட இவர்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகளால் மண்டையோடுகளை பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்

மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments