நாளை முதல் மலையகத்தில் வாகனங்கள் இயங்காது!

நாளை முதல் தாம் போக்குவரத்தில் ஈடுபடுவதில்லை என மலையத்தில்போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து பஸ்சேவையாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1000 ரூபாய் சம்பளத்தை கோரி கடந்த 11 நாட்களாக பெருந்தோட்ட தொழிலாளர்கள்முன்னெடுத்து வரும் வேலைநிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மற்றும்தனியார் பஸ் சேவையாளர்கள் நாளை முதல் பணிபகிஸ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாகதெரிவித்துள்ளனர்.

பல நாட்களாக இவர்கள் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டங்களினால் பஸ்கள்போக்குவரத்து செய்வதில் பெரும் அசௌகரியத்தை எதிர்கொள்வதாகவும் இதனால் பாரியநட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை மலையக மக்களின் நியாயமான கோரிக்கைக்கு எதிராக, பெருந்தோட்ட கம்பனிகளின் செயற்பாடாக இருக்குமோ என சிலர சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Comments