சிறந்த திணைக்களமாகியுள்ள பரீட்சைகள் திணைக்களம்!

கடந்த காலங்களில் திறமையாக செயற்பட்ட அரச திணைக்களங்களில், பரீட்சைகள் திணைக்களமே சிறந்த சேவையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச கணக்காய்வாளர் திணைக்களத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச திணைக்களங்களில் சிறந்த சேவையினை வழங்கிய திணைக்களத்தினை அடையாளம் காண்பதற்காக 38 அரசாங்க திணைக்களங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டுக்கு அதிகளவிலான வருமானத்தை ஈட்டித்தரும் ஒரு திணைக்களமாக, இலங்கை சுங்கத் திணைக்களம் விளங்குகின்றது.

எனினும் சேவை என்ற ரீதியில் கலால் திணைக்களம் உட்பட பிரதான பல திணைக்களங்களை விடவும் பரீட்சைகள் திணைக்களமே சிறப்பான சேவையை நாட்டுக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments