யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கீரிமலையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக அமைக்கப்படும் வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.

இந் நிகழ்வு ஜனாதிபதி தமையில் எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது. வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி அங்கு விசேட உரையாற்றவுள்ளார்.

அத்துடன் மரணமான பல்கலைக்கழக மாணவர்களின் இல்லங்களுக்கும் ஜனாதிபதி விஜயம் செய்யவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments