இலங்கை மக்களே அவதானமாக இருங்கள்!
தற்பொழுது நிலவும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் பல பாகங்களிலும் கடும் மழையுடன் இடி மின்னல்களின் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்து செல்லலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக டொனேடா காற்று, மீன் மழை மற்றும் ஆழங்கட்டி மழை ஆகியவை பெய்யக்கூடும் என வும் இதற்கு காரணம் இலங்கைக்கு சமீபமாக ஏற்பட்டுள்ள தாழமுக்கமென்றும் இதனால் பாதிப்புகள் அதிகமான ஏற்படும் என வானியல் நிபுணர் ஹேரத் தெரிவித்துள்ளார்.
விசேடமாக மேற்கு, தெற்கு, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமாக மழை பெய்யக்கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேல் மற்றும் யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம் காலி ஆகிய மாவட்டங்களில் காலை நேரங்களில் மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் மழை பெய்யகூடும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment