புதிய அரசியல் கட்சி உருவாகக்கூடிய சாத்தியம் உண்டு!

புதிய அரசியல் கட்சியொன்று உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 8ம் திகதி ரத்தினபுரியில் நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டம் புதிய கட்சி அமைப்பது தொடர்பானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதன் தலைமையும் தொடர்ச்சியாக கூட்டு எதிர்க்கட்சியினரை அடக்குமுறைக்கு உட்படுத்தினால் எதிர்காலத்தில் புதிய அரசியல் கட்சி உருவாகக்கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்து புதிய ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்பு உண்டு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments