பிள்ளையானை சிறையில் சந்தித்த மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்ச மட்டக்களப்புக்கு விஜயம் செய்த போதே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரகாந்தனுடன் சுமார் 15 நிமிடங்கள் உரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் தனது தலைமையிலான ஆட்சி மலரும் என்ற நம்பிக்கையினை இதன்போது தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Comments
Post a Comment