கொலை குற்றத்தில் வீரவன்ச குடும்பம்: யார் முதலில் கைது ?
கடந்த சில தினங்களுக்கு முன் விமல் வீரவன்சவின் வீட்டில் மர்மமான முறையில் 24 வயது மதிக்கதக்க ஜனித் திசாநாயக்கா என்ற இளைஞன் உயிரிழந்திருந்தார்.
அவரின் பிரேத பரிசோதனை நேற்று நடைபெற்றது மரண விசாரணையை கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி நடத்தி இம் மரணம் இயற்கையான மரணம் இல்லையெனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய மேலதிக விசாரணைக்காக சடலத்தின் பாகங்களை அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் அனுப்புவதற்கு சட்ட வைத்திய அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்த்தன வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை மரண விசாரணை அதிகாரி பீ.டீ.கலகெதர பரிசோதித்தார். இதன்போது சடலத்தின் மூக்கில் இருந்து இரத்தம் வந்திருப்பதை துடைத்துள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அத்தோடு
வாயில் சளியுடனான திரவம் ஒன்று வெளியேறியுள்ளதாகவும், வித்தியாசமான முறையில் உதடுகள் உலர்வடைந்துள்ளதனை கண்கானித்த மரண விசாரணை அதிகாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும் இதனையடுத்த கடுவெல பொலிசார் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே கடுவலை நீதவான் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இல்லத்திற்கு நேரடியாக சென்று இளைஞன் இருந்த பகுதியைில் பரிசோதனை மேற்கொண்டதாகவும் தெரியவருகின்றது.
நீதவான் உத்தரவின்படி கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை கோரியிருப்பதாகவும் பரிசோதனை தொடர்பில் தீர்ப்பு வழங்கிய சட்ட வைத்திய அதிகாரி மேலதிக பரிசோதனைக்காக சடலத்தின் பாகங்களை அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
தனது மகன் வீட்டில் இருந்து செல்லும் போது மிகவும் ஆரோக்கியமான உடன் நிலையிலேயே காணப்பட்டார் என உயிரிழந்த லஹிருவின் தாயார் தெரிவித்துள்ளார்.


Comments
Post a Comment