நாமல் ராஜபக்சவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக நேற்று உச்சநீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தகுந்த காரணமின்றி இலஞ்ச ஊழல்ஆணைக்குழு முன்பாக ஆஜராக மறுத்த குற்றச்சாட்டிலேயே அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவரே இந்தக் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், நீதியரசர்கள் பிரியசாந்த் டெப் மற்றும் புவனேக அலுவிஹார ஆகியோர் கொண்ட அமர்வின் போது நீதிமன்ற பதிவாளர் இந்த குற்றப்பத்திரிகையை கையளித்தார்.
இதேவேளை, ஏற்கனவே இலஞ்ச ஆணைக்குழுவை அவமதித்தது தொடர்பாக நாமல் ராஜபக்ஷ எழுப்பியிருந்த பூர்வாங்க ஆட்சேபனையை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததுடன் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக அக்டோபர் 3ஆம் திகதிக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment