பாடசாலைகளுக்கு அடுத்த வருடத்திற்கான புத்தகங்கள் தயார் நிலையில்!
அடுத்த வருடத்திற்கான தமிழ் மற்றும் ஆங்கில மொழி மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் அச்சிடப்படடுள்ளன என்று கல்வி அமைச்சின் நூல் வெளியீட்டு ஆணையாளர் நாயகம் பத்மினி நாலிகா வெலிவத்த தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு அடுத்த வருடத்திற்கான பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கையை முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான புத்தகங்கள் தற்போது விநியோகிக்கப்படு வதாகவும் அவர் கூறினார்.
பாடசாலைகளுக்கு அடுத்த வருடத்திற்கான பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை குறித்து மாகாண கல்வி செயலாளர்கள், கல்வி அமைச்சுக்கு அழைக்கப்பட்டு அது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டதாகவும் அமைச்சின் நூல் வெளியீட்டு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் தேசிய பாடசாலைகளுக்கும் நூல் வெளியீட்டுத் திணைக்களத்தின் மூலம் நேரடியாக புத்தகங்கள் விநியோகிக்கப்படும். டிசம்பர் மாதம் பாடசாலை விடுமுறைக்கு முன்னர் மாணவர்களுக்கு இவை வழங்கப்படவுள்ளன.
இம்முறை இரண்டாம் மற்றும் மூன்றாம் தரங்களுக்காக புதிதாக நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. அடுத்த வருடத்திற்குத் தேவையான 3 கோடி 90 இலட்சம் புத்தகங்கள் புதிதாக அச்சிடப்பட்டுள்ளன. இவற்றுள் 90 இலட்சம் புத்தகங்கள் தற்போது விநியோகிக்கப்பட்டுள்ளன.

Comments
Post a Comment