எவன்கார்ட் தொடர்பில் அமைச்சரின் கூற்று உண்மையல்ல!
எவன்கார்ட் ஆயுதக் கப்பலில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டுள்ளதால், அவற்றின் இலக்கங்கள் அழிந்திருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன கூறிய விடயம் உண்மைக்குப் புறம்பானது என்று அரச இரசாயண பகுப்பாய்வு சேவை அதிகாரிகள் சங்கத் தலைவர் டீ.எச்.எல்.டபிள்யூ. ஜயமான்ன கூறினார்.
அந்த ஆயுதங்கள் சம்பந்தமான அரச இரசாயண பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் எந்தவொரு இடத்திலும் அமைச்சர் கூறியது போன்று ஆயுதங்களின் இலக்கங்கள் அழிந்திருப்பதாக குறிப்பிடப்படவில்லை என்றும் .
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அறிந்து கொள்ள விரும்பும் அரசின் பொறுப்புள்ள அதிகாரிகள், நீதிமன்றின் அனுமதியுடன் அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
அறிக்கை இதுவரை நீதிமன்றத்தினால் கூட வாசிக்கப்படாத நிலையில், அது தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிடுவது குறித்து வருத்தமடைவதாக மேலும் கூறினார்.

Comments
Post a Comment