வெள்ளை நிற ‘மைக்’: பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி!
பாராளுமன்றில் ஒலிவாங்கிகள் பழுதடைந்ததன் பின்னணியில் புதிதாக மாற்றப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்களுக்கு முன்பாக பொருத்தப்பட்டிருக்கும் வெள்ளை நிற ஒலி வாங்கிகள் கட்டிடத்தின் உட்கட்டமைப்புக்கும் நிறத்துக்கும் பொருந்தாத வகையில் அமைந்திருப்பதாக உறுப்பினர்கள் ஏகமானதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தனது அதிருப்தியை வெளியிட்டதைத் தொடர்ந்து, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, லக்ஷ்மன் கிரியல்ல உட்பட்ட முக்கியஸ்தர்கள் பகிரங்கமாக கருத்து வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இதற்கிணங்கியதையடுத்து மீண்டும் ஒலி வாங்கிகளை மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment