தாமரைத்தடாக விவகாரம் முட்டி மோதும் மஹிந்த,மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் பொலன்னறுவையில் வைத்து கூறிய கருத்தொன்றை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

இது குறித்து மஹிந்தவின் ஊடகப் பிரிவு  வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கை (நெலும் பொகுன) அமைப்பதற்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவே அடிக்கல் நாட்டியதாகவும், அந்த நினைவுப் பலகையை அகற்றிவிட்டு மஹிந்த ராஜபக்ஷ புதிய நினைவுப் பலகையை வைத்ததாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டதாக, அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனாலும் மஹிந்த ராஜபக்ஷவினால் குறித்த நினைவுப் பலகை (சந்திரிக்காவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நினைவுப் பலகை) அகற்றப்படவில்லை எனவும், அதற்கு அருகில் பிறிதொரு நினைவுப் பலகையை நிர்மாணித்ததாகவும் மஹிந்தவின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

மேலும், தாமரைத் தடாக கலையரங்குக்கு செல்லும் எவருக்கும் குறித்த இரு நினைவுப் பலகைகளையும் பார்வையிட முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments