தமது சொந்தக் காணியின் பெறுமதியை கூட்டுவதற்கே சிலர் வீதிகளை அமைத்துக் கொடுத்தள்ளனர் -அப்துர் ரஹ்மான்
1990ம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட யுத்தத்தினால் முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்த காத்தான்குடி பாலமுனை பிரதேசமானது தற்பொழுது இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதில் சுதந்திர காற்றினை சுவாசித்தவர்களாக பாலமுனை பிரதேச மக்கள் வாழ்ந்து வருக்கின்றனர். அந்த வகையிலே பாலமுனை பிரதேசத்திலே சமூக சிந்தனையுடன் இயங்கி வருக்கின்ற இக்றாஹ் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் வெகு விமர்சையாக பாலமுனை விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் 28/10.2016 வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
இந் நிகழ்விற்கு பல வழிகளிலும் ஆரம்ப காலம் தொட்டு குறித்த பாலர் பாடசாலையின் முன்னேற்றத்திற்கு உதவிகளை செய்து வரும் அப்துர் ரஹ்மான் கலந்து கொண்டதுடன், காத்தான்குடி ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உத்தியோகத்தர்கள், கல்விமான்கள், அதிபர்கள்,ஆசிரியர்கள், பெரும் எண்ணிக்கையான பொது மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த நிகழ்வில் பிரதம அதீதியாக கலந்து கொண்ட அப்துர் ரஹ்மான் உரையாற்றுகையில்…. வருங்காலத்தில் பாலமுனை பிரதேசத்தில் வாழுகின்ற மக்களின் கல்வி முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மேற்கொள்ள இருக்கின்றது.
இந்த பகுதியிலிருந்து கடந்த காலங்களில் வைத்தியர்கள் சட்டத்தரணிகள், ஏனைய துறைகளை சார்ந்தவர்கள் என பல்கலைகழகத்திற்கு தெரிவாகி இருக்கின்ற நிலையிலே இன்னும் இப்பகுதியிலிருந்து பொறியியல் பீடத்திற்கு எந்த மாணவர்களும் பல்கலைகழகத்திற்கு தெரிவாகாமல் இருப்பது எமது பார்வையில் பெரும் குறையாகவே தென்படுகின்றது.
அதே போன்று இன்னோரன்ன துறைகளுக்கான தொழில் சார்ந்த கல்வியாளர்களை உருவாக்கும் தேவையும் எமக்கிருக்கின்றது. எனவே பாலமுனை பிரதேசத்தில் கல்வி முன்னேற்றத்தினை மையப்படுத்திய பல வேலைத்திட்டத்தினை இன்ஷா அல்லாஹ் எமது கட்சி முன்னெடுக்கும் என்பதோடு இங்கு வாழுக்கின்ற மக்களும் எமது முயற்சிகள் வெற்றி பெற பிரார்த்திக்க வேண்டும் என வேண்டிக்கொண்டார்.
மேலும் குறித்த நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்-
பாலமுனை கிராமத்தில் தனது சொந்த காணியின் பெறுமதியினை கூட்டிக் கொள்வதற்காக பல மில்லியன் ரூபாய்களை செலவு செய்து வீதிகளை அமைத்த அரசியல் வாதிகளினால் பொது மக்களின் அன்றாட தேவைகளுக்குறிய படு மோசமான நிலையில் இருக்கின்ற வீதிகளை அமைத்து கொடுக்க முடியாமல் போய்விட்டது.
இப்படியான யதார்த்தத்திற்கு மத்தியில்தான் இந்த பாலர் பாடசாலையினையும் மைதானத்தினையும் அண்டியுள்ள இந்த வீதியினை நல்லாட்சிக்காகன தேசிய முன்னணி அரசியல் அதிகாரத்தில் இல்லாத பொழுதும் எமது ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளருடன் சேர்ந்து கடந்த ஆண்டு புனரமைத்து கொடுத்தோம் அல்ஹம்துலில்லா.
அதே போலத்தான் கடந்தவாரம் சிஐஜி வீட்டு திட்ட பகுத்தியில் இருக்கும் மணல் வீதி ஒன்றினை கடந்த தேர்தல் காலங்களின் பொழுது நாங்கள் வெற்றி பெற்றாலும் அல்லது பெறா விட்டாலும் புனரமைத்து அமைத்து தருவோம் என்ற வாக்குறுதிக்கு அமைவாக அதனை புனரமைத்து கையளிக்கப்பட்டது. ஆகேவே கடந்த காலங்களில் எங்களுக்கு முறையான அரசியல் அதிகாரங்கள் கிடைத்திருந்தால் இதனை விடவும் ஏராளமான வேலைகளை எங்களினால் செய்திருக்க முடியும். இருந்தாலும் தற்பொழுது எங்களினுடைய சொந்த நிதிகளை கொண்டு எங்களால் முடிந்த தேவைகளை நிறைவேற்றி வருக்கின்றோம்.
குறித்த மணல் வீதியினை அமைப்பதற்கு வெறும் இரண்டு இலட்ச்சம் ரூபாய்கள் மாத்திரமே செலவு செய்யப்பட்டது. உண்மையில் பாராளுமன்ற அதிகாரம் அல்லது உரிய அரசியல் அதிகாரம் எங்களுக்கு கிடைத்திருக்குமேயானால் எங்களுக்கு கிடைக்கின்ற மாதாந்த சம்பளம், மற்றும் ஏனைய கொடுப்பனவுகளில் இருந்து இது போன்ற 25 வேலைகளை மக்களுக்கு செய்து கொடுக்க முடியும்.
அப்படியான மக்களுக்கு பிரயோசனம் அளிக்க கூடிய வேலைதிட்டத்தினைதான் நாம் மக்களுக்கு செய்து வருகின்றோம் என்ற செய்தியினை இங்கு நான் ஞாபகப்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்தார்.

Comments
Post a Comment