கிழக்கிற்கு ஒரு சர்வதேச விமான நிலையம் அமைக்குமாறு கோரிக்கை!
கிழக்கு மாகாணத்தில் ஒரு சர்வதேச விமான நிலையம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் இதனை தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் மற்றும் லங்கா எக்ஸிபிசன் அன்ட் கொன்ஃபரன்ஸ் சேர்விசஸ் நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டிலான சர்வதேச வர்த்தகக் கண்காட்சி மட்டக்களப்பில் நேற்று ஆரம்பமாகியது.
மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கிழக்கு மாகாணத்தில் ஒரு சர்வதேச விமான நிலையம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ள அதேவேளை, குறித்த விமான நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைக்கும் புணானைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தை சுற்றுலாத்துறை மூலம் அபிவிருத்தி செய்ய நாம் எதிர்ப்பார்த்துள்ள நிலையில், கிழக்கிற்கு விமானப் போக்குவரத்து வசதி இன்றியமையாததாகும்.
மேலும், பாரிய, நடுத்தர மற்றும் சிறிய கைத்தொழில் புரட்சி வலயமாக கிழக்கை மாற்றுவதற்குரிய திட்டங்களை பற்றி நாம் அரசுடன் கலந்துரையாடி வருகின்றோம்.


Comments
Post a Comment