அரச பணியாளர்களின் அவசர கவனத்திற்கு!

அரச ஊழியர்களின் அலுவலக பணி நேரத்தில் மாற்றங்களை செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

நாடு முழுவதும் நகர பிரதேசங்களில் காணப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக இத்தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது.

அலுவலகங்களில் பணிகள் ஆரம்பிக்கும் நேரத்தை முற்பகல் 9.30க்கும் முடியும் நேரத்தை பிற்பகல் 5.30 மணிக்கும் மாற்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

முதலில் இதனை பத்தரமுல்லையில் அமைந்துள்ள அரச அலுவலங்களில் ஆரம்பித்து, வெற்றியளித்த பின்னர் நாடு முழுவதும் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

Comments