வீடொன்றுக்குள் புகுந்த கொலைகாரக் கும்பல் தாக்குதல்.. சிறு பிள்ளை பலி.

ஹொரண, மொரகஹஹென பிரதேசத்தில் இன்று ( 6) காலை வீடொன்றுக்குள் புகுந்த கொலை காரக் கும்பல் ஒன்று  தந்தை மற்றும் இரு பிள்ளைகளை பயங்கர ஆயுதங்களால் தாக்கி விட்டு தலைமறைவாகி உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இருவர் படுகாயமடைத நிலையில் ஒரு பிள்ளை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கான காரணம், கொலையாளிகள் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments