மீண்டும் யாழில் தலை தூக்கும் பொலிஸாரின் தாக்குதல்: இளைஞர்கள் மத்தியில் பதற்றம்

யாழ். கோப்பாய் டிப்போவிற்கும் உரும்பிராய் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று காலை 9.00 மணியளவில் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

ஆஸ்பத்திரி வீதி சங்கானைப் பகுதியைச் சேர்ந்த தர்மபாலன் சுகிர்தன் (வயது 25 ) என்பவரையே பொலிஸார் தாக்கியுள்ளார்.

குறித்த இளைஞர் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிஸாருக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டில் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து தாக்கியதாகவும், தாக்கப்பட்டவர்களை கண்டால் அடையாளம் காட்டுவதாகவும் இளைஞர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முறைப்பாட்டின் பிரகாரம் கோப்பாய் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றார்கள்.

மேலும், பொலிஸாரின் அடாவடித்தனம் யாழில் தற்போது அதிகரித்து வருகின்றமையினால் இளைஞர்கள் மத்தியில் பதற்றம் நிலவுவதாகவும் கூறப்படுகின்றது.

Comments