மலையக பாராளுமன்ற உறுப்பினருக்கு ஏற்பட்ட விபரீதம்!

நாடாளுமன்ற அமர்வின் போது பொருத்தமில்லாத ஆடையை அணிந்து வந்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந் குமார் நாடாளுமன்றில் இருந்து வெளியேறினார்.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், கடுமையான செம்மஞ்சள் நிறத்திலான சேட்டை அணிந்து நாடாளுமன்றிற்கு நேற்றைய தினம் வருகை தந்துள்ளார்.

‘நாடாளுமன்றிற்கு பொருத்தமில்லாத ஆடையை அணிந்து வந்த காரணத்தால் இவராகவே நாடாளுமன்றத்தைவிட்டு வெளியேற வேண்டிய நிலையேற்பட்டது.பாராளு மன்ற உறுப்பினர்கள் கடுமையான நிறத்திலான ஆடை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  அவசியம் சாரியே அணிய வேண்டும் எனவும் படைக்கல சேவிதர் அனில் சமரசேகர கூறியுள்ளார்.

Comments