புதிய சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம்
உலக வங்கியின் 96 கோடியே 20 இலட்சம் ரூபாய் நிதி ஓதுக்கீட்டில் மலையக பிரதேசங்களில் 148 சிறுவர் பராமரிப்பு நிலையங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில் நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை, காலி, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் 24 சிறுவர் பராமரிப்பு நிலையங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுனக்கப்பட்டு வருகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் சென்.கூம்ஸ், ஹூட்வில், கிரேட்வேஸ்டன் மவுன்ட்வேர்டனன், அல்டன், போடைஸ் மற்றும் பொய்ஸ்டன் ஆகியத் தோட்டங்களிலும் கண்டி மாவட்டத்தில் சோகம, டெல்டா, குயின்ஸ்பெரி மற்றும் எல்கடுவ ஆகியத் தோட்டங்களிலும் பதுளை மாவட்டத்தில் தம்பெதென்ன, பின்கரவ, டெமெரியா மற்றும் ஸ்பிரிங்வெலி ஆகியத் தோட்டங்களிலும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் ரம்புகந்த, ஹப்புகஸ்தென்ன, எல்ஸ்டன் மற்றும் பம்பெகம ஆகியத் தோட்டங்களிலும் கேகாலை மாவட்டத்தில் அன்ஹிட்டிகம, பன்வத்த, சப்புமல்கந்த மற்றும் வெனிவெல ஆகியத் தோட்டங்களிலும் காலி மாவட்டத்தில் தென்னெஹென, கிகியானகன்த, தும்பர, பெந்தொட்ட ஆகியத் தோட்டங்களிலும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதன் ஒரு கட்டமாக, அட்டன் போடைஸ் தோட்டத்தில் கொணக்கலை பிரிவில் சிறுவர் பராமரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, 16.10.2016 அன்று, அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி என பல முக்கயஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment