தாயை கோழிக்கூட்டுக்குள் அடைத்து வைத்த மகள்!

கல்கமும-வன்னிகுடாவெவ பிரதேசத்தில் முஸ்லிம் வயோதிப தாய் ஒருவரை கோழிக்கூட்டுக்குள் அடைத்து வைத்த மகளை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனது 85 வயது வயோதிப தாய் ஒருவரையே அவரது மகள் கோழிக்கூட்டுக்குள் அடைத்து வைத்துள்ளார்.

குறித்த மகளை கைது செய்த பொலிஸார் தாயை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மனநிலை பாதிக்கப்பட்டுள்ள தாயை மகள் இரவு வேளைகளில் சங்கிலியால் கட்டிப்போட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Comments