சுவாமிநாதனின் கோரிக்கைக்கு யாழ் பல்கலை மாணவர்கள் சம்மதம்!
இரண்டு பல்கலைக்கழக மாணவர்களின் படு கொலைக்கு கண்டணம் தெரிவித்து இன்று மேற்கொண்டு வந்த போராட்டத்தை அமைச்சர் டி.எம் சுவாமிநாதனின் தலையீட்டின் காரணமாக நிறுத்திக்கொண்டார்கள் என்று அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் உட்பட்ட நிர்வாகத்தினரையும் மாணவர் ஒன்றியத்தினரையும் அமைச்சர் சந்தித்துள்ளார்.
இதனையடுத்தே போராட்டத்தை விலக்கிக்கொள்ள மாணவர்கள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினையை தீர்க்கும் முகமாக நாளை பகல் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தரும் மாணவர் ஒன்றியத்தினரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவிருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments
Post a Comment