திருகோணமலை ஜமாலிய வித்தியாலயத்தில் பார்வையாளர் அரங்கிற்கு அடிக்கல்
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்ஸின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து ஒரு மில்லியன் ரூபாய் நிதியின் மூலம் ஜமாலியா முஸ்லீம் வித்தியாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (30)காலையில் ஜமாலிய முஸ்லீம் வித்தியாலய அதிபர் முகைஸ்ஸின் தலைமையில் இடம்பெற்றது .
குறித்த நிதி ஒதுக்கீடு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கினால் குறித்த பாடசாலைக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
குறித்த நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர் மற்றும் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் உட்பட பாராளுமனற உறுப்பினரின் இணைப்பாளர் மௌஸூம் உட்பட திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.விஜேந்திரன்,கோட்டக்கல்வி அதிகாரி .செல்வநாயகம், உட்பட கட்சி பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு வைபவரீதியாக அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.



Comments
Post a Comment