காஷ்மீரில் கடும் மோதல்!
காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்துக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரா மற்றும் ஆர்னியா செக்டார்களில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் கிராம பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் நடந்த இந்த தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். கிராம மக்கள் 6 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
குறிப்பாக அவர்கள் பயன்படுத்திய அதே அளவிலான தரம் கொண்ட ஆயுதங்கள் மூலம் இந்த தாக்குதல் நடந்தது.
இவ்வாறு ஆர்.எஸ்.புராவில் நடந்த சண்டையில் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
மேலும் மற்றொரு வீரர் படுகாயமடைந்தார். அங்கு தீவிர சண்டை நடந்த போதிலும் படுகாயமடைந்த வீரரை வாகனம் மூலம் மற்ற வீரர்கள் மீட்டு சென்றனர்.
இதைப்போல சுந்தர்பனி செக்டாரில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்ததாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Comments
Post a Comment