இஸ்லாமிய பெண்மணிகளை உருவாக்கும் கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக்கல்லூரி

ல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக்கல்லூரி என்றால் இந்நாட்டு முஸ்லிம்களில் அதனை அறியாதோர் யாருமிருக்க இயலாது. நாடு பூராகவும் பிரபல்யமடைந்த ஒரு அரபுக்கலாசாலையாகத் திகழ்கிறது. கொழும்பு,கண்டி வீதியில், பஸ்யாலை என்ற இடத்திலிருந்து நான்கு கி.மீ. தூரத்தில் கல் – எளியா எனும் அழகிய கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது.

சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் பாதுகாப்பான ஒரு சூழலில் சகல வசதிகளும் கொண்ட பிரமாண்டமான வகுப்பறை கட்டிடங்கள், விடுதிகள், பள்ளிவாசல், காரியாலயம், கேட்போர் கூடம், நூலகம், சமையலறை என பல்வேறு மாடிக்கட்டிடங்களுடன் ஒய்யாரமாய் இருப்பதைக் காணலாம்.

வருடந்தோறும் ஏழாம் தரத்தை சார்ந்த சுமார் 100 அல்லது 150 மாணவிகள் நேர்முகப்பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டு 8 வருடங்கள் அரபு மொழி மூலமான சன்மார்க்க கல்வியையும், கா.பொ.த சாதாரண தர/ உயர்தர பரீட்சைகளுக்கான தமிழ்ப்பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.

இன்றைய காலகட்டத்தில் சிங்கள மொழியின் முக்கியத்திவம் மற்றும் தாஇக்களின் அருமை அறிந்து சிங்கள மொழி மூலமான கற்கை நெறிகளும் வழங்கப்படுகின்றன. அது மாத்திரமன்றி மார்க்க அறிவுள்ள வைத்தியர்கள் இன்றைய சமூகத்திற்கு இன்றியமையாதது என்பதை நோக்காகக் கொண்டு மருத்துவத்துறைக் கற்கைகளும் இடம்பெற்று வருகின்றன.

அநாதைகள்,கைவிடப்பட்ட சிறுமிகள், யுவதிகள் போன்றோருக்கு புகலிடம் வழங்குகிறது. கல்வி என்பது ஆண், பெண் இரு பாராலும் தேடிப்பெற வேண்டிய சொத்து என என்றோ அண்ணலார் நவின்றுள்ளார்கள். அன்றைய காலகட்டத்தில் காணப்பட்ட பெண்கள் வீரத் தியாகிகளாகவும் இஸ்லாத்தின் வெற்றிக்கும், சமூக மறுமலர்ச்சிக்கும் இல்லறம் முதல் போர்க்களம் வரை அவர்கள் செய்த பங்களிப்பு மகத்தானவை. அப்படிப்பட்ட பெண்மணிகளாக உருவாக்குவதே இத்தாபனத்தின் குறிக்கோளாகும்.

இவ்வாறாக பெண்களின் கல்வியின் முக்கியத்துவத்தினை அறிந்து இக்கல்லூரியின் உருவாக்கத்திற்காய் பாடுபட்ட மர்ஹூம் மெளலவி அல்-ஹாஜ் எம்.ஏ.அலவி அபுல் ஹஸன், மர்ஹூம் அல்-ஹாஜ் எச்.எல்.எம்.காதர், மர்ஹூம் அல்-ஹாஜ் எம்.ஏ.ஹஸன், மற்றும் மர்ஹூம்களான அல்-ஹாஜ் ஏ.எச்.எல்.ஏ.ஸலீம், அல்-ஹாஜ் ஏ.ஆர்.ஏ.எம்.ஜுனைத் ஆகியோர்களினதும் மற்றும் பல பெரியார்கள் ஆகியோர்களின் உன்னத கனவுகள் இக்கல்லூரி மாணவிகளாகிய எம் மூலம் நிறைவு பெறும் என்பதை உறுதியுடன் கூறுகிறோம். இக்கல்லூரி உருவாக்கத்திற்காய் பாடுபட்ட அனைவரினதும் சேவைகளை இறைவன் பொருந்திக்கொள்வானாக!
Hilmiya 
MLAC KAL-ELIYA

Comments