பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்!

தற்போதைய அரசியலமைப்பில் காணப்படும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் நடைமுறையை அவ்வாறே புதிய அரசியலமைப்பிலும் பேணுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சகல கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரமர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் விகாரையொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சகல அரசியல் கட்சிகளும் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கும் உறுபுரையை அவ்வாறே முன்கொண்டு செல்ல இணக்கம் தெரிவித்துள்ளன.

இதேபோல் சகல மதத் தலைவர்களும் அதற்கு இணங்குகின்றனர். இதனால் இந்த விடயத்தில் எந்தப் பிரச்சினையும் கிடையாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments