இரத்தினபுரி தமிழ் வித்தியாலயத்தில் தாக்குதல்!
இரத்தினபுரி சூரியகந்தை எக்பர்த் தமிழ் வித்தியாலயத்தில் அதிபர், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் காவலாளியொருவரும் குழுவொன்றினால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து சூரியகந்தை எக்பர்த் தமிழ் வித்தியாலய மாணவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருந்துபசார வீடு ஒன்றிற்கு சென்ற குழுவொன்று, மது அருந்திவிட்டு சூரியகந்தை எக்பர்த் தமிழ் வித்தியாலயத்தின் பாடசாலையின் வேலியை உடைத்துக்கொண்டு பாடசாலையின் வளாகத்தில் நுளைந்துள்ளது.
இதன்போது, காவலாளி தடுத்த நிலையில், குறித்த குழுவினர் காவலாளியை தாக்கியுள்ளனர். பின்னர் பாடசாலை அதிபர் கேட்டபோது, அதிபரையும் தாக்கிய குழுவினர், அதனை தடுக்க சென்ற இரண்டு ஆசிரியர்களையும் தாக்கியுள்ளனர்.
இதனால் பலத்த காயமடைந்த நால்வரும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிபர் மற்றும் ஆசிரியர்களை தாக்கிய குழுவை கைதுசெய்யுமாறு கோரி பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யாவிடின் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்படபோவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Comments
Post a Comment