கருணாவின் சொகுசு ஜீப் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் மீட்பு

முன்னாள் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரனின் (கருணா அம்மான்) சொகுசு ஜீப் வண்டியொன்று நிதி குற்ற விசாரணைப்பிரிவினரால் மட்டக்களப்பில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பிள்ளையாரடியிலுள்ள வாகன திருத்துமிடமொன்றில் வைத்து நேற்று முன்தினம் இந்த சொகுசு ஜீப் வண்டி கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து வந்த நிதி மோசடி விசாரணைப்பிரிவு அதிகாரிகள் wp2014. 2015 எனும் இலக்கமுடைய இன்ரகூலர் ரக ஜீப் வண்டியை கைப்பற்றிச் சென்றுள்ளனர். இந்த வாகனம் மட்டக்களப்பு பிள்ளையாரடியிலுள்ள வாகன திருத்துமிடத்தில் திருத்தவேலைகளுக்காக வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Comments