செட்டிக்குளம் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் தீ விபத்து!

செட்டிக்குளம் பிரதேச செயலாளர் அலுவலக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செட்டிக்குளம் பொலிஸார், மின்சார சபை ஊழியர்கள் மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து, மின்சாரக் கோளாரே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Comments