இருவர் ஒரு நாட்டை ஆட்சி செய்ய முடியாது-கோட்டா!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நாட்டுக்காக சில தீர்மானங்களை தயக்கமின்றி எடுத்ததாகவும், தற்போது அவ்வாறான தீர்மானங்கள் எடுக்க முடியாமல் அரசு தடுமாறுவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

எவ்வாறாயினும் ராஜபக்ஷ ஒருவரை சிறைக்கு அனுப்புவதென்றால் அரசாங்கம் விரைவாக தீர்மானம் எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே நாட்டைஇருவரில் ஒருவரே நிர்வாகிக்க வேண்டும் என்பதை முன்னாள் ஜனாதிபதி  தெரிவித்திருப்பதாக, அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது தெரிவித்தார்.

இவ்வாறான நிலை காரணமாகவே சமூக ஊடகங்கள் வாயிலாக தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகவும், விசாரணைகள் மேற்கொள்ளும் நிறுவனங்கள் அரசியல் தேவைப்படி செயற்படுவதை ஜனாதிபதி விளங்கிக் கொண்டு உரையாற்றி இருப்பதை  வரவேற்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யுத்தத்தாலும், குப்பைகளாலும் அசுத்தமடைந்திருந்த  நாட்டையும் தலைநகர் கொழும்பையும் குறுகிய காலத்தில் உலகில் வேகமாக வளர்ச்சியடையும் நகரமாக மாற்றியதாகவும், இந்த வேலைத்திட்டங்களுக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் இரவுபகலாக உழைத்ததாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

Comments