அர்ஜுன் மகேந்திரன் தப்பி ஓடவில்லை!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் நாட்டைவிட்டு தப்பியோடவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவை போன்று, அவர் நாட்டை விட்டு தப்பியோடவில்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மாறாக திருமண வைபம் ஒன்றில் கலந்துக் கொள்ளும் வகையிலேயே அவர் வெளிநாடு சென்றிருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறிகள் முறைகேடுகள் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜுன் மகேந்திரன் நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் இக்கருத்தை நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

பிணை முறி விவாகரம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அர்ஜுன் மகேந்திரன், மத்திய வங்கி ஆளுநராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பரிந்துரையின் பேரில் நல்லாட்சி அரசாங்கத்தில் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Comments