தற்கொலை செய்தவரின் உடல் பரிசோதனை!
லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கான பொறுப்பை ஏற்பதாகக் கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு உயிரிழந்த புலனாய்வுப் பிரிவு உறுப்பினரின் சடலத்தை, கேகாலை பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி பரிசோதனை செய்தார்.
கேகாலை – கரடுபன பகுதியிலுள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட, இளந்தாரிகே எதிரிசிங்க ஜயமான்ன என்ற புலனாய்வுப் பிரிவு உறுப்பினரின் சடலம் புதைக்கப்பட்டு 5 நாட்களின் பின்னர் தோண்டி எடுக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவிற்கு அமையவே அவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவு உறுப்பினரின் சடலம், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரிகள் குழுவினால் பரிசோதிக்கப்பட்டது.


Comments
Post a Comment