மாணவர்களை பொலிசார் கொன்றது நல்லது!

மாணவர்களை காவற்துறையினர் படுகொலை செய்தது பொருத்தமானதே என மேவின்  சில்வா தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே பொலிஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

இதன்போது மது அருந்திய நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பொலிஸார் இடைமறித்தனர். எனினும் அதனை பொருட்படுத்தாது மோட்டார் சைக்கிளில் சென்றோர் பயணித்த போது பொதுமக்களின் நலன்கருதியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில் நாட்டை காத்த வீரர்கள் என்றும் பார்க்காமல் விபத்து நடைபெற்ற விரைவைக் காட்டிலும் விரைவாக சம்பவத்தில் தொடர்புடைய பொலிஸார் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இது நாட்டை காத்த படைவீரர்களுக்கு கௌரவ குறைச்சலை ஏற்படுத்துகின்ற செயலாகும் என்றும் மேவின் சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் சர்வதேச கோரிக்கைக்கு ஏற்ப இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால் அதனை தாம் கண்டிப்பதாகவும் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இன்று தமது அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்த செயலை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்

Comments