சகல அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கும் அவர்களது மாதாந்தச் சம்பளம் வாழ்நாள் முழுவதும் – ஜனாதிபதி
அங்கவீனமுற்ற அனைத்து படைவீரர்களுக்கும் மாதாந்த சம்பளத்தை அவர்கள் ஓய்வுபெற்ற பின்னரும் வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக வழங்குவதற்கு அரசாங்கம் கொள்கைத் தீர்மானத்துக்கு வந்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
நேற்று (27) கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வீரப் பதக்கம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த முன்மொழிவு தொடர்பில் அரசாங்கம் கடந்த ஆண்டு தீர்மானத்தை எட்டி அதற்காக 2017 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவில் சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும் சிலரின் தேவைக்காக ஆர்ப்பாட்டங்கள்கூட இடம்பெற்றதாகவும் ஜனாதிபதி நினைவுபடுத்தார்.
எவ்வாறான விமர்சனங்கள், தூற்றுதல்கள் வந்தாலும்; நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் தான் பின்பற்றும் கொள்கை துளியளவு கூட மாற்றப்படாதெனவும், முப்படையினருக்கு தேவையான வளங்களை குறையின்றி வழங்கி அவர்களைப் பலப்படுத்துவதுவதுடன் போர்க்களதில் போரிட்ட வீரமிகு படையினரின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக எப்போதும் பாடுபடுவதாகவும் குறிப்பிட்டார்.
தாய்நாட்டின் முன்நோக்கிய பயணம் தொடர்பான புரிந்துணர்வற்ற, நாட்டின் தேசிய பாதுகாப்பை குறைத்து மதிப்பிட்டுவோரின் சந்தர்ப்பவாத செயற்பாடுகளால் நாட்டின் ஜனாதிபதி என்ற வகையிலும் பாதுகாப்பு அமைச்சரென்ற வகையிலும் தன்னிடம் பின்னடைவை ஏற்படுத்த முடியாதெனவும் குறிப்பிட்டார்.
சில அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்கேற்றவாறு நாட்டின் தேசிய பாதுகாப்பை இயக்குவதற்கு தயாரில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
போரில் தோற்கடிக்கப்பட்ட போதிலும் கருத்தியல் ரீதியாக தோற்கடிக்கப்படாத, நாட்டுக்கு வெளியிலிருந்து ஒருபோதும் அடைய முடியாதவற்றை கனவு கண்டுகொண்டிருப்பவர்களை சர்வதேச ரீதியில் தோற்கடிப்பதற்கு மிகவும் நட்புறவுடனான சர்வதேச கொள்கையுடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தமது உயிருக்கும், தற்பாதுகாப்புக்கும் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் கருத்திலெடுக்காது தமது நண்பர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகவோ தமது படையணியின் இலக்கை அடைவதற்காகவோ வினைத்திறனான சேவையில் சுயவிருப்புடன் எதிரிகளுக்கு முகங்கொடுத்து தீரமிக்க துணிச்சலை வெளிப்படுத்திய போரில் ஈடுபட்ட இராணுவ, கடற்படை, விமானப்படைகளின் நிரந்தர மற்றும் தொண்டர் படை அலுவலர்களுக்கு பரம வீர விபூஷண, வீரோதார விபூஷண, வீர விக்ரம விபூஷண, ரணவிக்ரம, ரணசூர பதக்கங்கள் வழங்கப்பட்டன.


Comments
Post a Comment