இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்கும் சீனா!
120 மில்லியன் ரென்பின்பீ பெறுமதியான இராணுவ உதவிகளை இலங்கைக்கு வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் தலைகர் பீஜிங்கில் நடைபெற்றுவரும் ஆசிய பிராந்திய பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, தலைமையிலான இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் தளபதிகளுடன் சீன பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் நடத்திய சந்திப்பின் போது இந்த உதவிகளுக்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது.
அத்துடன் கடலோரப் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கப்பலொன்றையும் பெற்றுக்கொடுக்கவும் சீன அரசு முன்வந்துள்ளது.

Comments
Post a Comment