நாம் எப்படி நமது பெற்றோரை நடத்துகின்றோமோ….!!!
1.வயதான பெற்றோர்…
2.வயதானாலும் பெற்றோர்.
இந்த இரண்டு வசனங்களுக்கும் இடையிலான வேறுபாடு விசாலமானது.
இரண்டாவது மனநிலை இல்லாமலாகி முதலாவது எண்ணத்தோடு மாத்திரம் வாழுகிற பிள்ளைகள் அதிகரித்துவிட்டார்கள்.
இலங்கை போன்ற உறவுகளோடு இயைந்து வாழுகிற சமூகங்களுக்கு மத்தியிலும் பெற்றோரை விலங்குகளின் கூடுகளுக்குள் அடைத்து போடுகிற போக்கு அண்மைக்காலமாக அதிகரித்துவருகிறது.
அதிலும் ஒரு படி மேலே சென்று பார்த்தால்….
“தாயின் பாதத்தின் கீழ் சொர்க்கம் இருக்கிறது”
“இறைவன் தாயைவிட பல மடங்கு இரக்கமுடையவன்”
என தாயைக்குறித்து உன்னதப்படுத்திய இஸ்லாமிய மார்க்கத்தினை சொந்தங்கொண்டாடுகிறவர்களும் கூட்டுக்குள் தாயை அடைத்துப்போடும் அளவுக்கு காலம் கெட்டுப்போய் கிடக்கிறது.
பெற்றோரை கைவிடுவது, வயோதிபர் மடங்களில் விடுவது என்பவற்றையும் பார்க்க கூடுகளுக்குள் சிறைப்படுத்துவது எவ்வளவு கொடுமையானது?
கடைசியில் பொலீசார் அல்லவா அவர்களை பிள்ளைகளிடமிருந்து மீட்டெடுத்து மடங்களில் கொண்டு போய் விடுகிறார்கள்!
இது எவ்வளவு பெருங்கொடுமை?
அயலவர்களின் கவனத்தை பெற்று பொலிசார் வந்து மீட்டுச்செல்லும் இவ்வாறான சில சம்பவங்களே ஊடகங்கள் வாயிலாக வெளிச்சத்திற்கு வருகின்றன!
பொது மக்களின் கண்களில் படாமல், சட்டத்திற்கு தெரியாமல் இன்னும் மறைக்கப்பட்டிருக்கும், பிள்ளைகளால் வீடுகளுக்குள்ளே கூடு கட்டப்பட்டிருக்கும் வயதான பெற்றோர் எத்தனை பேர் இன்னும் மெளனமாக அழுதுகொண்டிருப்பார்கள்?
யாராவது வந்து தங்களை மீட்டடெடுக்க மாட்டார்களா என்று அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்க கூடும்.
இயற்கையாகவே ஒரு விதி இருக்கிறது…..
நாம் எப்படி நமது பெற்றோரை நடத்துகின்றோமோ அப்படியே நாமும் நமது பிள்ளைகளால் நடத்தப்படுவோம்.
இதில் விதிவிலக்குகள் நிகழ்ந்தால் மறுமை நாளில் அதற்கான கடுமையான தண்டனையினை சந்திக்க நேருமென்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை.
வயோதிபர் இல்லங்களின் வாயிற்கதவுகளில்….
” வயதான பெற்றோர் என்பதை விட வயதானாலும் பெற்றோர்”
என்ற வாசகத்தை எழுதிவைத்தால்,
மனச்சாட்சி உறுத்தும் யாராவது சிலர் யோசிக்க கூடும்.
வயோதிபர் இல்லங்களில் மாத்திரமல்ல, நாம் வாழும் இல்லங்களிலும் இந்த வாசகங்களை எழுதிவைக்க வேண்டிய கூண்டு கலாச்சாரத்திற்குள் சிக்கிவிட்டோம்.
வெளிவருவது சிரமமானது.

Comments
Post a Comment