Skip to main content

மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும் மஹிந்த என்ன செய்ய போகிறார்..?


images
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்புக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது, மட்டக்களப்பில் உள்ள மங்களராம ரஜமஹா விகாரையில் இடம்பெறவுள்ள யுத்தத்தின் போது உயிர் நீத்த இராணுவத்தினருக்கான நினைவுத் தூபி நிர்மாணிப்புக்கான அடிக்கல் நடும் நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார்.

அதனை தொடர்ந்து மதியம் இடம்பெறவுள்ள ஆசிர்வாத பூசையிலும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகள் மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்னதேரர் தலைமையில் இடம்பெற்றவுள்ளது.

குறித்த நிகழ்வு தொடர்பான சுவரொட்டிகள் மட்டக்களப்பு பகுதி எங்கும் ஒட்டப்பட்டு இது தொடர்பான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


Comments