அறிவாளி யார்..? பலவீனமானவன் யார்..?
முஃமின்களே !] உங்களில் நன்மையின் பக்கம் அழைக்கும் ஒரு கூட்டத்தினர் இருந்து வரட்டும் ...........[அல்குர் ஆன் .. 3..104]
நபியவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அபூ யாஃ லா ஷத்தாது பின் அவுஸ் [ரலி] அறிவிக்கிறார்கள்.. அறிவாளி , தன் மனத்தை கணக்குக் கேட்டும், மரணத்திற்கு பின்னுள்ள வாழ்விற்காக செயல்பட்டும் வருகிறானோ அவனேயாவான் . பலவீனமானவன் யார் என்றால் தன் மனத்திற்கு அதன் இச்சைகளைத் தொடர்ந்து [மனத்தின் இச்சைகளுக்குகேற்ப செயல்பட்டு ] அல்லாஹ்வை ஆதரவு வைக்கிறானே அவனேயாவான் .
நூல்.. திர்மிதி]
ஒரு உண்மையான முஸ்லிம் எப்படி இருப்பார் , அவர் மறுமையின் சிந்தனைக் கொண்டவராக இருப்பார். அவர் தன்னுடைய நிலையைப் பற்றி அக்கறை உள்ளவராக இருப்பார். ஒரு உண்மையான முஸ்லிம் எவ்வளவுதான் அதிகமாக நற்கருமங்கள் செய்தாலும் , அவருக்கு மன திருப்தி இருக்காது , இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று எண்ணத்துடன் இருப்பார். அவர் செய்த அனைத்து நல்ல அமல்கள் , அவைகள் அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்பட்டதா என்று ஒரு விதமான அச்சத்துடனும், ஆதரவுடனும் இருப்பார்.
நபியவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் அபூஹுரைரா [ரலி] அறிவிக்கிறார்கள்.. மனிதன் தனக்கு [உலகம் மற்றும் மறுமை விஷயத்தில்] முக்கியமில்லாததை விட்டு விடுவது , அவனது அழகிய இஸ்லாமியப் பண்புகளில் நின்று முள்ளதாயிருக்கும் .
நூல்.. திர்மிதி]
இன்று நாம் பார்க்கிறோம் . முகநூலில் சில சகோதரர்கள் , அவர்களுக்கு தேவையில்லாத விஷயத்தில் ஈடுப்பட்டுக் கொண்டு . அவர்களுக்கு இம்மைக்கும் பலன் இல்லை, மறுமைக்கும் பலன் இல்லை . அப்படிப்பட்ட செயல்களில் ஆர்வமாக இருக்கிறார்கள். அப்பொழுது கடைத்தெருவில் அரட்டை அடித்துக் கொண்டு பொழுது போக்குவார்கள். இப்பொழுது முகநூலை தேவையில்லாமல் ஏதாவது ஸ்டேட்டஸ் போட்டு , பொன்னான நேரத்தை வீணாக கழித்துக் கொண்டு வருகிறார்கள். இதனால் இவர்களுக்கு எந்தவிதத்திலும் ஒரு துளிக் கூட பலன் இல்லை என்பதை இவர்கள் எப்பொழுது உணர்வார்கள் ..? அல்லாஹ் விசாரணை நெருங்கி கொண்டுயிருக்கிறது என்று கூறுகிறான். இவர்கள் விளையாட்டாக அல்லாஹ்வின் கடமைகளை செய்யாமல் , அதனால் தண்டனைகள் அனுபவிக்க நேரிடுமே என்று கவலை இல்லாமல் இருக்கிறார்கள்.
நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது அல்லாஹ்தான் நன்கு அறிவான்! அறிவாளியா ?அல்லது பலவீனமானவரா ? நீங்களே உங்கள் மனத்திடம் கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள் !


Comments
Post a Comment