நுவரெலியா நானுஓயாவில் விபத்து! மூவர் பலி! ஐவர் கவலைக்கிடம்!
இன்று புதன்கிழமை நுவரெலியா மாவட்டம் நானுஓயா பகுதியிலுள்ள கிளரன்டன் எனும் பகுதியில் டிப்பர் ரக வாகனமொன்று 300 அடி பள்ளத்தில் பாய்ந்ததில், மூவர் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவிலிருந்து கெல்சிமா எலிய பகுதியிலுள்ள மரக்கறி தோட்டமொன்று வேலைக்குச் சென்றுவிட்டு, மீண்டும் நுவரெலியாவுக்கு திரும்பி வருகையிலேயே இந்த விபத்துஇடம்பெற்றுள்ளது.
குறித்த டிப்பர் ரக வகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகவும் படுகாயமடைந்த ஐவரும் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Comments
Post a Comment