ஆவா குழுவை எதிர்­கொள்ள புதிய குழு அமைப்போம்

வடக்கில் செயற்­படும் வாள்வெட்டு கும்­ப­லான ஆவா குழுவை எதிர்­கொள்­வ­தற்கு  புதிய குழு அமைக்க  உள்­ள­தாக ராவண பலய அமைப்பு தெரி­வித்­துள்­ளது. வடக்கில்  பாது­காப்பு படை­களை தாக்கும் ஆவா குழு உறுப்­பி­னர்கள் யாரும் இது வரையில் கைது செய்­யப்­ப­டாத நிலையில் நாட்டின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு வேடிக்கை பார்க்க முடி­யாது என ராவண பலய அமைப்பின் பொதுச் செய­லாளர் இத்­தே­கந்த சத்­தா­திஸ்ஸ தேரர்  தெரி­வித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

அண்­மைக்­கா­ல­மாக வடக்கில் மிகவும் மோச­மான சூழல் காணப்­ப­டு­கின்­றது.  ஆவா என்ற வாள்வெட்டு குழுவின் செயற்­பா­டுகள் கார­ண­மாக அங்கு அமைதி­யின்மை ஏற்­பட்­டுள்­ளது. நாட்டின் பாது­காப்பு  முக்­கி­ய­மா­ன­தாகும். ஆனால் அந்த குழுவில் யாரும் இது­வ­ரையில் கைது செய்­யப்­பட வில்லை .

ஆகவே உட­ன­டி­யாக பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் நோக்கில் அர­சாங்கத்தால் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் . அதே போன்று குறித்த ஆவா குழு தொடர்­பாக அவ­தா­னிக்க ராவணா பலய புதிய குழுவை ஸ்தாபிக்க உள்­ளது. ஏனென்றால் வடக்கில் கட­மையில் இருக்கும் பாது­காப்பு அதி­கா­ரி­களை இனம் தெரி­யாத குழு தாக்­கு­கின்­றது என்றால் அதனை வேடிக்கை பார்க்க முடி­யாது.

அர­சாங்கம் இந்த விட­யத்தில் கூடிய கவனம் செலுத்­து­வ­தாகத் தெரியவில்லை. அவ்­வாறு கருத்தில் கொண்­டி­ருந்தால் ஆவா குழுவை கைது செய்­தி­ருக்க முடியும். எவ்­வா­றா­யினும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது எமது கடமை யாகும் என குறிப்பிட்டார்.

Comments