ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களிடையே முக்கிய சந்திப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தலைமையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

இச் சந்திப்பு இன்று இரவு 7 மணியளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமகால அரசியல் நிலைமை, கட்சிக்குள் இருக்கின்ற சவால்கள், அரசாங்கத்திற்குள் காணப்படும் நெருக்கடிகள் மற்றும் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட யோசனை ஆகியன குறித்து இதன்போது கலந்துரையாடப்படவிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய உரை, அதன் எதிரொலியாக இலஞ்ச, ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் பதவி விலகல் போன்றவை தொடர்பிலும் இன்றை சந்திப்பின்போது கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments