காஸ்மீரில் இந்திய இராணுவத்திற்கு தலை இடியாக மாறி இருக்கும் புறாக்கள்
உளவு பார்க்க பயன்படுத்தப்பட்ட 150 புறாக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 5ம் தேதி ஜம்முவில் விக்ரம் சவுக் பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது வாழைப்பழம் கொண்டு செல்லப்படும் பெட்டியில் 150 புறாக்கள் பதுக்கி கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டம் பிரிவு 144ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர்களிடமிருந்த புறாக்கள் விலங்குகள் நல வாரிய தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து தொண்டு நிறுவனத்தின் தலைவர் புறாக்கள் குறித்து சந்தேகம் தெரிவிக்கவே, உளவு பார்க்க கொண்டு வரப்பட்டது என்ற சந்தேகம் போலீசாருக்கு வந்தது. இதனையடுத்து போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
புறாக்களின் கால்களில் மாட்டப்பட்ட வளையங்களும், புறாக்களில் இணைக்கப்பட்டிருந்த காந்த பொருட்களுமே, உளவு பார்க்க கொண்டு வரப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாபில் புறா ஒன்றை பிடித்த போலீசார், அதில் பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடும்படி செய்தி எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment