நீதிமன்ற சிறைக்குள் அடைக்கப்பட்ட கோத்தபாய
அவன்கார்ட் வழக்கு தொடர்பாக நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நீதிமன்ற சிறையில் ஒரு மணித்தியாலம் வரை வைவக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருடன் முன்னாள் கடற்படை தளபதிகள் மூவர் உள்ளிட்ட மற்றிய 6 பேரும் இவ்வாறு சிறையில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானதை தொடர்ந்து வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற சிறையில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வேளையில் இவர்கள் உயர் பதவிகளில் இருந்தவர்கள் எனவும் இவர்களை அவ்வாறு சிறையில் வைப்பது அவர்களின் கௌரவத்திற்கு இழுக்கானது என அவர்கள் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் மன்றாடிய போதும் நீதவான் தனக்கு நீதிமன்ற சட்டத்தின்படியே செயற்பட முடியுமென தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவர்கள் அந்த சிறைக்குள்ளிருந்து விடுதலையாகினர்.

Comments
Post a Comment